மணவாள மாமுனிகள் அவதார தினவிழா
ADDED :1524 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் அவதார தினவிழா நடந்தது. ஐப்பசி வளர்பிறை மூல நட்சத்திரத்தில் வைணவ குருமார்களில் ஒருவரான மணவாளமாமுனிகள் அவதார தினம் கொண்டாடப்பட்டது. கடந்த மூன்று நாட்கள் தொடர் உற்ஸவம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், ஆதிஜெகநாதர், பத்மாஸனித்தாயார், பட்டாபிஷேக ராமர் உள்ளிட்ட சன்னதிகளில் மங்களாசாசனம் நடந்தது. சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.