தென்கரையில் சூரசம்ஹாரம்
ADDED :1465 days ago
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் வள்ளி,தெய்வயானை சமேத சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் முன்னிலையில் நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது. இதைதொடர்ந்து இன்று (நவ.,10) காலை சுவாமியின் அன்னபாவாடை தரிசனம், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.