ஹாசனாம்பா கோவில் மஹோற்சவத்தில், 1.54 கோடி ரூபாய் வசூல்
ADDED :1466 days ago
ஹாசன் : ஹாசனாம்பா கோவில் மஹோற்சவத்தில், 1.54 கோடி ரூபாய் வசூலாகிஉள்ளது. ஹாசனாம்பா கோவில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 6 வரை திறக்கப்பட்டிருந்தது.
ஹாசனாம்பா, சித்தேஸ்வரா மஹோற்சவம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோவில் உண்டியல் நேற்று முன் தினம் எண்ணப்பட்டது. இரவு வரை எண்ணும் பணிகள் நடந்தது. ஹாசனாம்பிகா கோவில் உண்டியலில் 83 லட்சத்து 89 ஆயிரத்து 770 ரூபாய்.சித்தேஸ்வரர் கோவில் உண்டியலில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 355 ரூபாய் வசூலாகியிருந்தது. டிக்கெட் விற்பனையால் 63 லட்சத்து 97 ஆயிரத்து 815 ரூபாய் வசூலானது.