உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் பரவசம்

சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் பரவசம்

சூலூர்: பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்  நடந்தது.

சூலூர் அடுத்த பொன்னாண்டாம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல திருப்பணிகள் நடந்தன. கடந்த, 8 ம்தேதி மாலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தன. இரவு அஷ்ட பந்தன மருந்திடல், கோபுர கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, முதல்கால ஹோமம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்று, மேள, தாளத்துடன் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, சென்னியாண்டவ சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !