2 ஆண்டாக நடக்காத சூரசம்ஹாரம்; வத்திராயிருப்பு பக்தர்கள் வேதனை
ADDED :1468 days ago
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார வைபவம் இரண்டாம் ஆண்டாக நடக்காததால் அப்பகுதி பக்தர்கள் மன வருத்தம் அடைந்தனர்.
இங்கு காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடக்கும். எட்டு நாட்கள் நடக்கும் விழாவில் தினசரி அபிஷேகம், அலங்காரம், மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் ஏழாம் நாளில் சூரசம்ஹாரம் நடக்கும். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக சஷ்டி விழா அமைப்பின் சார்பில் விழா நடந்து வந்தது. 2020ல் கொரோனா காரணமாக சூரசம்ஹாரம் நடக்கவில்லை. இந்த ஆண்டும் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.