கோசாலையில் கோபூஜை
ADDED :1438 days ago
மதுக்கரை: மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள போடிபாளையத்தில் தியான் பவுண்டேஷன் சார்பில், கோசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கோபாஷ்டமி எனும் மாடுகளுக்கான கோபூஜை, ஆனந்த வேதாஷ்ரமத்தின் பிரம்மரிஷி ஈஸ்வரன் தலைமையில் நடந்தது.
மாடுகளுக்கு மாலை போட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அவைகளுக்கு பழம், காய்கறி வழங்கப்பட்டது. கோசாலை மேற்பார்வையாளர் சந்தோஷ் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பில் இக்கோசாலை அமைந்துள்ளது. 80 காளைகள், 127 பசுக்கள், நாய்களும் பராமரிக்கப்படுகிறது. விரைவில் சின்னாம்பதியில், எட்டு ஏக்கர் பரப்பில் இக்கோசாலை விரிவுபடுத்தப்படவுள்ளது. மக்கள் நோடியாக வந்து விட்டுச் செல்லும் அனைத்து உயிரினங்களும் ஏற்றுக் கொள்ளப்படும், "என்றார்.