உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

மதுக்கரை: மதுக்கரையை அடுத்த வாளையார் அருகே புதுப்பதி கிராமத்தில், ஆனந்த வேதாஷ்ரமம் உள்ளது. இங்கு பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவிலில் புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரம், சிவலிங்கம். சிவன், பார்வதி, வினாயகர், முருகன் மற்றும் நந்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இதன் கும்பாபிஷேக விழா, 15ம் தேதி முற்பகல், 11:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. இதனையொட்டி, நேற்று மாலை. மூத்த பிள்ளையார் முதல் வழிபாடு துவங்கியது. நாளை காலை, 6:00 முதல், 10:00 மணி வரை முதல் கால யாக வேள்வி நடக்கிறது. இதனையொட்டி, புனித தீர்த்தங்கள் அழைப்பு, புற்று மண் எடுத்து வருதல், முளைப்பாரி அழைப்பு, மண் எடுத்து பூஜித்தல், கலைமகள், அலைமகள் மலைமகள் வழிபாடு உள்ளிட்டவை நடக்கின்றன. மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை இரண்டாம் கால வேள்வியும், 15ம் தேதி காலை, 6:00 முதல், 10:00 மணி வரை மூன்றாம் கால வேள்வியும் நடக்கின்றன. தொடர்ந்து, 11:00 மணிக்கு காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி தலைமையில், மகா கும்பாபிஷேகம், மகா தரிசனம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன. இதையடுத்து சுவாமிகளின் அருளுரை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பத்து வித தரிசனம் மதியம் அன்னதானம் ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !