வடவள்ளியில் குரு பெயர்ச்சி ஹோமம்
ADDED :1430 days ago
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது. வடவள்ளி, ஹாப்பி கார்டனில் உள்ள செல்வ விநாயகர், பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குரு பகவான், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை, 6:22 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். குருபெயர்ச்சியையொட்டி, செல்வ விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. அதன்பின் மகா சங்கல்பம், மூலமந்திர யாகம், கலச பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. செல்வ விநாயகர், பக்த ஆஞ்சநேயர், ஐயப்ப சுவாமி, குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கூட்டுப்பிரார்த்தனை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.