12 ஜோதிர்லிங்க தரிசனம் : சைக்கிளில் இளைஞர் பயணம்
ADDED :1423 days ago
ராமேஸ்வரம்: 12 ஜோதிர்லிங்க தலங்களை ஜார்க்கண்ட் இளைஞர் சைக்கிளில் சென்று தரிசிக்க, நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார்.
ஜார்கண்ட் சேர்ந்த நிகில்29, இவர் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், ராஜஸ்தான், உ.பி., ம.பி., மாநிலங்களில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தரிசிக்க முடிவு செய்தார். அதன்படி பிப்.,21 ல் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் கோயிலில் தரிசனம் செய்து சைக்கிளில் பயணத்தை துவக்கினார். தினமும் 80 கி.மீ., தூரம் பயணம் செய்த நிகில் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக 12 தலங்களையும் அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் தரிசிக்க உள்ளதாகவும், இதற்காக 14 ஆயிரம் கி.மீ., தூரம் பயணிக்க உள்ளதாக தெரிவித்தார்.