கள்ளக்குறிச்சியில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1525 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற் ஜோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று முன்தினம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத் திருமுறைகளில், 8ம் திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும் அதில் உள்ள 658 பாடல்களையும் ஓதுவார்கள் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை பாடினர்.