உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி ஐயப்ப சேவா சங்கத்தினர் தகவல்

பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி ஐயப்ப சேவா சங்கத்தினர் தகவல்

மதுரை:சபரிமலை மண்டல, மகர விளக்கு உற்ஸவத்திற்கு செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் தெரிவித்தனர். மதுரையில் இதன் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் ஆவணங்களை சரிபார்க்க நிலக்கலில் 10 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கேயும் முன்பதிவு செய்யும் வசதி உண்டு. பம்பை ஆற்றில் குளிக்க அனுமதிக்கப் படுவர். சன்னிதானத்தில் இரவு தங்க அனுமதியில்லை.

அபிேஷக நெய்யை அதற்கான கவுன்டரில் கொடுத்து டோக்கன் பெற வேண்டும். பின்னர் அதை காண்பித்து அபிேஷக நெய்யை பெற்றுக்கொள்ளலாம்.ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 3 வேளை அன்னதானம் வழங்கி வருகிறோம். பக்தர்களுக்கு உடல்நலம் பாதித்தாலோ, இறந்தாலோ எங்கள் செலவில் அவர்களது சொந்த ஊருக்கே கொண்டு செல்ல தேவசம் போர்டு, மாவட்ட மருத்துவ அதிகாரி அனுமதி பெற்றுள்ளோம்.

சபரிமலையில் துப்பரவு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். அனைத்து சேவைகளையும் 1000 தொண்டர்கள் சுழற்சி முறையில் செய்ய உள்ளனர்.நிலக்கலில் சுந்தரம் ஆட்டோ மொபைல்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் சார்பில் இலவச வாகன பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில தொண்டரணி படை தளபதி ராஜதுரை, அலுவலக மேலாளர் முத்துபாண்டி, பி.ஆர்.ஓ., மணி, தங்கராஜ் உடனிருந்தனர்.பக்தர்கள் தொடர்பு கொள்ள...பக்தர்களுக்கு உதவ ஐயப்ப சேவா சங்கத்தினர் தயாராக உள்ளனர்.

தொடர்புக்கு...சன்னிதானம் 04735 - 202 043பம்பை 04735 - 203 407


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !