சுவாமியே சரணம் ஐயப்பா.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED :1422 days ago
இன்று கார்த்திகை முதல் நாளையொட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள கோவிலில் மாலை அணிந்து கொண்டனர். திண்டுக்கல் மலையடிவார ஐயப்பன் கோயில், பொள்ளாச்சி ஐயப்பன் கோவில், உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் விரதமிருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.