திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்கள் பங்கேற்க தடை
ADDED :1422 days ago
விழுப்புரம் : திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவிற்கு தடையை மீறி சென்றால் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவர் என, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடு இன்று மதியம் 1:00 மணியில் இருந்து வரும் 20ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே, இந்த நாட்களில் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வர வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்ட மக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் செல்ல வேண்டாம். தடையை மீறி செல்பவர்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.