ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கபனை தீபம்
ADDED :1453 days ago
ராமேஸ்வரம் : கார்த்திகை தீப விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கபனை தீபம் ஏற்றினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப விழா யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கபனை தீபம் ஏற்றினர். கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளினர். கோயில் மூன்றாம் பிரகாரம் தீப விளக்குகளால் ஜொலித்தது.