உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், குட்டையூரில் மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மாதேஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து மாலை, 5:30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கருட கம்பத்தில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு மலைமீது வெண்கல கொப்பரையில், 100 மீட்டர் காடா திரி வைத்து, அதன் மீது நெய் ஊற்றி, கற்பூரங்களை அடுக்கி வைத்தனர். கோவில் தலைமை அர்ச்சகர் மகேந்திரன் சிறப்பு பூஜை செய்தார். சரியாக, 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றினார். இந்த தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரிந்துகொண்டிருக்கும்.

அப்போது ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தை வழிபட்டனர். உதவி பூசாரிகள் முருகன், சிவப்பிரகாஷ், ஜெகதீசன், சுப்பிரமணி ஆகியோர் பூஜை செய்தனர். எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், விழாக்குழு தலைவர் சுப்பையன், ஊர் கவுடர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலில் மகா தீபம் ஏற்றிய பின்பு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !