பெரும் பணிவு என்பது பண்பாகும்
* வசதியாக இருக்கும்போதும் பணிவாக இரு. அதுவே உயர்ந்த பண்பாகும்.
* ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் முடித்துவிடு.
* உன் குடும்பம் நல்ல நிலையை அடைய, நீ முயற்சி செய்தால் தெய்வமே துணை நிற்கும்.
* நல்ல புத்தகங்களை படிக்க படிக்க இன்பம் தரும். அதுபோல் நல்லவரி்ன் நட்பு பழக பழக இன்பம் தரும்.
* பிறர் உனக்கு துன்பம் செய்தாலும் அவர்களுக்கு தீங்கு செய்யாதே.
* பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டாவிட்டால் உனக்கு கண் இருந்தும் பயன் இல்லை.
* பண்புள்ளவர்கள் கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பர்.
* விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளை தகுதியானவருக்கு கொடு.
* நல்லவனாக வாழு. கடவுளாக போற்றப்படுவாய்.
* கடவுளை வணங்கு. நன்மை, தீமை உன்னை பாதிக்காது.
* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ அல்ல. அவனது உழைப்பு.
* கல்வி கற்றதன் பயனே கடவுளின் திருவடியை வணங்குவது.
* உழைக்க தயாராக இருக்கிறாயா... வெற்றி உனக்கே.
* ஆசையை அடக்கு. பிறப்பில்லாத நிலையை அடைவாய்.
* அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர் கஷ்டப்பட்டால் அது உடனே வெளிப்பட்டுவிடும்.
* உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து வாழ்.
* லட்சியத்தை எண்ணிக்கொண்டே இரு. நிச்சயம் உன் லட்சியம் நிறைவேறும். – சொல்கிறார் திருவள்ளுவர்