இங்கு என்ன வேலை
ADDED :1493 days ago
வெண்டல் பிலிப் என்ற அமெரிக்கர், கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடுபவர். இவரது செயலை பிடிக்காத பாதிரியார் ஒருவர், ‘‘என்ன மிஸ்டர் வெண்டல், கறுப்பின மக்கள் இல்லாத இடத்தில் பிரச்சாரம் செய்கிறீர்களே...’’ என்றார்.
‘‘பாவம் செய்தவர்களையும், நரகத்தில் துடிப்பவர்களையும் கரையேற்றத்தானே நீங்களும் பாடுபடுகிறீர்கள்’’ என்று கேட்டார்.
பாதிரியார் சிரித்தபடியே, ‘‘ஆமாம். இதில் என்ன சந்தேகம்’’ என்று சொன்னார்.
‘‘அப்படியானால் நீங்கள் நரகத்துக்குத்தானே போக வேண்டும். உங்களுக்கு இங்கே என்ன வேலை. கருத்து எப்படி இருந்தாலும் அவர்களை சென்று அடையும்’’ என்று சொன்னார். இப்படி தன்னை விமர்சனம் செய்தவரின், பேச்சை வைத்தே அவரை மடக்கினார் வெண்டல்.