கொடுத்து வைத்தவர்கள்
ADDED :1446 days ago
ஒருவர் வெற்றி பெற்றால், ‘அவன் கொடுத்து வைத்தவன், யாரோ அவனுக்கு உதவி செய்துள்ளார்கள்’ என்று சொல்லுவோம். அதற்கு பின்னால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார், அதனால் அவர் எத்தனை சுகங்களை இழந்திருப்பார் என்று நினைப்பதில்லை. நாம் செய்யாததை அவர் செய்துவிட்டார் என்பதே இதற்கு காரணம்.
முயற்சி செய்தால்தான் எதுவுமே கிடைக்கும். ஒன்றைப்பெற வேறொன்றை துறக்கத்தான் வேண்டும். இதுதான் உலக நியதி. வெற்றி பெறுபவர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் மீது பொறாமைப்பட வேண்டாமே.