நலம் தரும் நமசிவாயம்
ADDED :1423 days ago
திருவண்ணாமலையில் தீபமேற்றும் போது, நமச்சிவாய, சிவாயநம என்ற மந்திரங்களைக் காது குளிரக் கேட்கலாம். ‘சிவ’ என்றால் ‘பரம மங்களம்’. ‘சிவ சிவ’ என்று மனம் ஒன்றி சொன்னால் கொடிய பாவமும் பறந்தோடும். பாவம் செய்யாத துாய்மையான மனம் உண்டாகும். சிவனை வணங்க காசிக்குப் போக வேண்டாம், கங்கையில் மூழ்க வேண்டாம், திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கவில்லையே என நினைக்க வேண்டாம். மனதார ‘சிவசிவ’ என்ற மந்திரம் சொல்லி வீட்டருகிலுள்ள கோயிலைத் தரிசித்தால் போதும் வாழ்வில் நலம் சேரும்.