உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிர் பெற்ற கன்னிப்பெண்

உயிர் பெற்ற கன்னிப்பெண்


சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பக்தர் சிவநேசன். இவரது மகள் பூம்பாவை இளம்வயதில் மரணம் அடைந்தாள். அவளின் உடம்பை எரித்த சாம்பலை அவர் பாதுகாத்து வந்தார். திருத்தல யாத்திரையாக வந்த திருஞானசம்பந்தரிடம் சாம்பலை ஒப்படைத்தார். அவர் தேவாரம் பாட சாம்பலில் இருந்து கன்னியாக பூம்பாவை உயிருடன் வந்தாள். அந்த பாடலில், “விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்” என்கிறார். அதாவது பூம்பாவையே....மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் திருக்கார்த்திகை தீபவிழாவை தரிசிக்காமல் போய் விட்டாயே... என வருந்துகிறார். அதன்பின்னரே சிவனருளால் பூம்பாவை உயிருடன் எழுந்தாள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !