கமல் நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்து வழிபாடு
ADDED :1411 days ago
சென்னை: கமல்ஹாசன் நலம் பெற வேண்டி, மக்கள் நீதி மய்யத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண நலம் பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை, அவரது கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.மாவட்ட செயலர் மோகன் தலைமையில், கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர், பால்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கவுஸ்பாசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.