சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :1744 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காலபைரவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று ருத்ர யாகம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், தேன், திருமஞ்சனம், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால பைரவர் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.