மேட்டுப்பாளையம் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1488 days ago
மேட்டுப்பாளையம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோயிலில், கால பைரவர் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு துவங்கிய இப்பூஜைகள், 7:00 மணி வரை நடந்தன. முன்னதாக யாகசாலை அமைத்து, 27 வகை மூலிகை பொருட்களுடன், வேள்வி பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து காலபைரவருக்கு வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. கோவில் தலைமை அர்ச்சகர் துரைசாமி, உதவி அர்ச்சகர்கள் மனோஜ்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் பூஜைகளை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.