உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகரிக்கும் ஐயப்ப பக்தர்கள் வருகை; சூடுபிடிக்கும் பால்கோவா விற்பனை

அதிகரிக்கும் ஐயப்ப பக்தர்கள் வருகை; சூடுபிடிக்கும் பால்கோவா விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நகரிலுள்ள சுவீட் ஸ்டால்களில் பால்கோவா விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் போதோ, தரிசனம் முடிந்து திரும்பும் போதோ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து பால்கோவா விற்பனையாகாமல் வியாபாரிகள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி கும்பிட வருகின்றனர். அப்போது தங்களுக்கு தேவையான அளவு பால்கோவா வாங்கி செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருவதால் பால்கோவா விற்பனை அதிகரித்து, வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !