சிவகோடி மஹாலஷ்மி பீடம் சார்பில் கிரிவலம்
ADDED :1405 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கோடி பஞ்சாஷரி ஜெப ருத்ர பாராயணம் செய்தவாறு, ஸ்ரீசிவகோடி ஸ்ரீமஹாலஷ்மி ஸ்ரீபீடம் சார்பில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆந்திரபிரதேசம், அனந்தபுரத்தை சேர்ந்த, சிவகோடி ஸ்ரீமஹாலஷ்மி ஸ்ரீ பீடத்தை சேர்ந்த பக்தர்கள், 500க்கும் மேற்பட்டோர், கோடி பஞ்சாஷரி ஜெப மஹா ருத்ர பாராயணம் செய்தவாறு கடந்த, 29 முதல், வரும், 2 வரை கிரிவலம் சென்று வழிபாடு, செய்து வருகின்றனர். கிரிவலத்தின் போது, காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர் சுவாமி உருவ படத்தை, வாகனங்களில் அலங்கரித்து கிரிவலம் சென்று வழிபட்டனர்.