தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நிவாரணப் பணி
ADDED :1446 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் பெருமழை நிவாரணப் பணிகள் நேற்று நடந்தது.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை மற்றும் இரவு உணவுச் சேவை, மூன்றாவது தினமாக 10 இடங்களில் தினமும் இரண்டு வேளை 5000 பேருக்குச் சுவையான உணவு வழங்கப்பட்டது. இன்றும் பல குக்கிராமங்களுக்கும் சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆக மொத்தம் மூன்று தினங்களில் (30 நவம்பர்,1,2 டிசம்பர்) ஒரு தினத்திற்கு 10,000 பேருக்கு வேண்டிய அளவிற்கு உணவு வழங்கப்பட்டது. 30 ஆயிரம் பேர் இந்தச் சேவையை ஏற்றுக்கொண்டனர். ரூ. 15 லட்சம் செலவில் நடைபெற்ற நிவாரணப் பணிக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.