குற்றாலம் கோயிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED :1405 days ago
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் பக்தர்களிடையே போலி முகநூல் குறித்து விழிப்புணர்வு நடந்தது. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் எஸ்.பி., கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றாலம் கோயிலில் பக்தர்களிடையே சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் போலியான முகவரியுடன் பலர் தொடர்பு கொள்கின்றனர். நண்பர்கள் போல் பழகுபவர்களிடம் ஏமாந்து விட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கினர். சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் 155260 மற்றும் இணைய முகவரி www.cybercrime.gov.in அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.