திருமலை சிறப்பு தரிசனம் 60 நாளுக்கு முன் முன்பதிவு
ADDED :1516 days ago
சென்னை: திருமலை வெங்கடாசலபதி சிறப்பு தரிசனம்மற்றும் பஸ் டிக்கெட்டிற்கு, முன் பதிவு செய்யும் நாட்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சென்னை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து, திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பஸ் டிக்கெட்டுடன் சிறப்பு தரிசன டிக்கெட்டும், 30 நாட்களுக்கு முன், பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இம்மாதம் 2ம் தேதி முதல் 60 நாட்களுக்கு முன், முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆந்திர மாநில போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. பயணியர் வசதிக்காக, கார்கோ பார்சல் சேவையும் உள்ளது. மேலும், விபரங்களுக்கு- 96009 50019 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.