உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் நாள்: ரத்தின திருவடி அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 3ம் நாள்: ரத்தின திருவடி அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 3- ம் நாள் (06.12.2021)  ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார  கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம்,  மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில்  பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து 3- ம் நாள் இன்று (6ம் தேதி)  ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார  கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம்,  மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில்  பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !