சோமலிங்கசுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :1405 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், 108 சங்குகளில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன், மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.