அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1738 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதவல்லி அம்பாள் சமேத அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் மூன்றாம் சோம வாரத்தை முன்னிட்டு, இளநீர் கொண்டு நிரப்பப்பட்ட, 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடந்தது. ஸ்வஸ்திக் மற்றும் ஓம் வடிவத்தில் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தது. அமுத லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.