உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத மந்திரம் முழங்க வைகை நதியில் தீப ஆரத்தி வழிபாடு

வேத மந்திரம் முழங்க வைகை நதியில் தீப ஆரத்தி வழிபாடு

பரமக்குடி, :  பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் படித்துறை வைகை ஆற்றில் பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். நதியை பெண் கடவுளாக பாவித்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கங்கை ஆரத்தி தொடர்ந்து நடத்தப்படுவதுடன், காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கில் ஆரத்தி விழா நடக்கிறது. இதன்படி பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் ஆரத்தி எடுப்பது வழக்கம். தற்போது 10 நாட்களாக ஆற்றில் தண்ணீர் சென்று வரும் நிலையில், அப்பகுதியில் பெண்கள் திரளாக கூடி ஆரத்தி எடுத்து விளக்கினை ஆற்றில் மிதக்க விட்டனர். அர்ச்சகர்கள் வேத மந்திரம் கூறி வைகைக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். தொடர்ந்து மக்கள் நோய் நொடியிலிருந்து பாதுகாப்பாக வாழவும், நதியின் தூய்மையை வலியுறுத்தியும் மற்றும் ஆண்டுதோறும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அனைத்து வகையான பஞ்சங்கள் போகவேண்டும் என்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !