குன்றத்து கோயில்களில் சங்காபிஷேகம்
ADDED :1401 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் மீனாட்சி அம்மன் முன்பு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலைக்கு பின்புறம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி யாகசாலை பூஜைகள் முடிந்தது, சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்து நாகாபர்ண அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிசுவநாதர் முன்பு 108 சங்குகளில் புனித நிரப்பி வைத்து பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது.