உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோழிஸ்வரர் கோவிலில் கார்த்திகை மூன்றாம் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு வலம்புரி சங்கு உட்பட 108 சங்குகளில் காவிரி தீர்த்தம் வைத்து சங்காபிஷேகம், ருத்ர ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மாலை நடந்த சங்காபிஷேகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !