உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதா கல்யாண உற்சவம்

சீதா கல்யாண உற்சவம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராயப்பன் தெருவிலுள்ள பேட்ராயசுவாமி மஹாலில், 10ம் ஆண்டு சீதா கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு சீதா ராமர் படப்பிரதிஷ்டை நடந்தது. 9:00 மணி முதல் நாம சங்கீர்த்தனமும், ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் பாண்டுரங்க பஜனையும் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் மற்றும் ஆரியபவன் நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டில், சீதா கல்யாண உற்சவம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி சீதா கல்யாண விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !