ஈரோடு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம்
ADDED :1394 days ago
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு, குண்டம் நிகழ்ச்சி, கடந்த, ?ம் தேதி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. கோவில் பின்புற மைதானத்தில் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, குடும்பத்துடன் சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து மாவிளக்கு, முப்பாடு ஊர்வலம் நடந்தது. நாளை இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டு, சுவாமி திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.