அலங்காநல்லூரில் 38 ம் ஆண்டு உற்சவ விழா
ADDED :1714 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் தெப்பக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், சுப்ரமணிய சுவாமி கோயில் 39ம் ஆண்டு உற்சவ விழா இரண்டு நாட்கள் நடந்தது. மகா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமத்தை தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டி 108 திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.