உலக நன்மைக்காக சிறப்பு யாகம்: அகல்விளக்கு ஏற்றி வழிபாடு
ADDED :1401 days ago
சிவகங்கை : சிவகங்கையில் மகாயோகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தி, அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.காஞ்சிபுரம் மகாமகரிஷி அறக்கட்டளையின் மகாயோகம் அமைப்பு சார்பில் சிவகங்கையில் உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி, யாகம் நடந்தது. விஸ்வநாதன் வரவேற்றார். விஜயானந்தன் ரிஷி உலக நன்மைக்காக சிறப்பு யாகத்தை நடத்தினார். யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு யோகா, தியானம் நடத்தினர். தொடர்ந்து சிறப்பு வேள்வி நடத்தி, பக்தர்கள் மண் அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.