அலங்காநல்லூரில் 108 விளக்கு பூஜை
ADDED :1729 days ago
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தெப்பக்குளம் சித்தி விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. மகா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமத்தை தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.