சோழீஸ்வரர் கோவிலில் கொடியேற்று விழா
ADDED :1399 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மூலனூர் ரோட்டில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி 5 ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று காலை நடந்தது. நேற்று முதல் டிச 20 ம் தேதி திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு திருவாதிரை உற்சவம் நடைபெறும். உற்சமூர்த்திக்கு 11 நாட்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோவிலைச் சுற்றி இரவு 7.30 மணியளவில் திருவீதி உலா நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.