உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறில் ஐயப்ப சேவா சங்கம் மண்டல சிறப்பு பூஜை: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன்

மூணாறில் ஐயப்ப சேவா சங்கம் மண்டல சிறப்பு பூஜை: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன்

மூணாறு: மூணாறில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 14ம் ஆண்டு மண்டல சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. தவிர சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பழைய மூணாறில் உள்ள பார்வதி அம்மன் கோயில் ஆகியவற்றில் கணபதி ஹோமமும், காளியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதேபோல் சரண கோஷம் முழங்க ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோரின் தேர் பவனியுடன் ஆன்மீக ஊர்வலமும் அன்னதானமும் நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஐயப்ப சேவா சங்க தலைவர் பாலசிங், செயலாளர் பிரபாகர், பொருளாளர் முனியாண்டி மற்றும் விழா கமிட்டி தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் பிரதீப்குமார் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !