ராஜபாளையத்தில் கன்னி பூஜை, ஐயப்ப ஸ்வாமி வீதி உலா
ADDED :1443 days ago
ராஜபாளையம்: வில்லாளி வீரன் ஐயப்ப பக்தி பஜனை சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் சுவாமி வீதி உலா நடந்தது. முடங்கிய ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நிகழ்ச்சியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இரவு கன்னி பூஜை மற்றும் நாமசங்கீர்த்தனம் பஜனை தொடர்ந்தது அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்து அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வில்லாளி வீரன் ஐயப்ப பக்தர் பஜனை சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.