உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

அரசமர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் தெப்பம் அருகில், அமைந்துள்ள, அரசமர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், தீப லக்ஷ்மி பூஜை, களும், மாலை அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், வேதபாராயணம் நடந்தது. சுவாமி விக்கிரகம் சிவன் கோவிலில் இருந்து, ஆலய ஸ்தானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. நேற்று காலை கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, சுமங்கலி பூஜை, நடந்தது. 7 மணிக்கு கடம் யாக வேள்வியில் இருந்து புறப்பட்டு, விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகங்கள் நடந்தது. அன்னதானம் நடந்தது. வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் ஜெயவிலாஸ் குடும்பத்தினர், இந்து சமய இணை ஆணையர் குமர துரை, உதவி ஆணையர் கணேசன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் சமுதாய பெரியவர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் தேவி தலைமையில், அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !