உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், கோவில்வழி பெரும்பண்ணை ஸ்ரீ வரதராஜ பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பூர், கோவில்வழி பெரும்பண்ணை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில்  வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !