மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் சூரை விழா
ADDED :1504 days ago
திருநெல்வேலி: மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயில் சூரை விழா நேற்று நடந்தது. மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தவசு அம்மன் கோயில் சூரை விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமமும், அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், மதியம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் மெயின் ரோட்டில் உள்ள திடலில் மஞ்சள் பால் பொங்க வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.