உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு : பக்தர்கள் மகிழ்ச்சி

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு : பக்தர்கள் மகிழ்ச்சி

சபரிமலை :கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் நீடித்ததால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது.

பம்பையில் குளிக்க, நீலி மலைப்பாதையில் பயணம் செய்ய, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது பக்தர்களை வருத்தமடைய செய்தது.
இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் பலர் தரிசனத்துக்கு வரவில்லை. தேவசம் போர்டின் வருமானம்பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பம்பையில் குளிக்க, தர்ப்பணம் செய்ய, நீலி மலைப்பாதையில்நடந்து செல்ல, சன்னிதானத்தில் சில மணி நேரம் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நெய் அபிஷேகத்துக்கு பக்தர்களை அனுமதிக்காமல், நெய் தேங்காயை கவுன்டர்களில் பெறுவது பெரும் குறையாக உள்ளது. நெய் அபிஷேகத்துக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துவக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் அய்யப்பனை வணங்கி ஆனந்தமாக திரும்பி செல்கின்றனர். தங்க அங்கி பவனி மண்டல பூஜை நாளில் சபரிமலையில் அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி வரும் 22ல் ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் தங்க அங்கி பவனி நடத்தப்படும் என, தேவசம் போர்டுஅறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !