உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லக்கில் நடராஜர்: பெண்கள் மட்டும் சுமந்து வந்து வழிபாடு

பல்லக்கில் நடராஜர்: பெண்கள் மட்டும் சுமந்து வந்து வழிபாடு

மயிலாடுதுறை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் நடராஜர்  சுவாமியை பெண்கள் மட்டும்  பல்லக்கில்  சுமக்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீகச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது இங்கு  திருவாதிரையை முன்னிட்டு இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பெண்கள் உதவியால்  இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்தக் கோயிலில் பெண்களுக்கென தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாட்டிற்கு வந்த பெண்கள் பல்லக்கை தூக்கிக்கொண்டு கோவிலில் பிரகாரங்களில் ஊர்வலமாக வந்தனர் ‌. மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே சுவாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !