அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: தீப மை சாற்றி வழிபாடு
ADDED :1404 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜர் பெருமாள், சிவகாமியம்மனுடன் ஆயிரம் கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கார்த்திகை தீபத்தில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், ஏற்றப்பட்ட மகா தீப நெய்யில் முலிகை பொருட்கள் சேர்த்து “மை”யாக மாற்றப்பட்டு இன்று ஆருத்ரா தரிசனத்தில், ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் பெருமாளுக்கு தீப மை சாற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.