கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :1468 days ago
கடலூர் : ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினமானது நடராஜருக்கு அவதார நாளாகும். இதனையொட்டி கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் சாமிக்கு இன்று காலை 21 திவ்யங்களால் சிறப்பு அபிஷேகம். 12.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவ தரிசனத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.