உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், எளிமையான முறையில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி உற்சவர் மூர்த்திகளுக்கு நேற்று காலை 9:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடந்தது. பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், நடராஜர் சுவாமி வீதியுலா வராமல், சன்னதியில் அருள்பாலித்தார். பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !